முரசு அஞ்சல் 9.8

  • user warning: Table './drupal/cache' is marked as crashed and should be repaired query: SELECT data, created, headers, expire, serialized FROM cache WHERE cid = 'schema' in /Library/WebServer/Documents/drupal/includes/cache.inc on line 27.

  • user warning: Table './drupal/cache' is marked as crashed and should be repaired query: SELECT data, created, headers, expire, serialized FROM cache WHERE cid = 'theme_registry:about' in /Library/WebServer/Documents/drupal/includes/cache.inc on line 27.


admin - Posted on 03 February 2011

நீண்ட காலமாக எங்கள் முரசு அஞ்சல் செயலியைப் பயன்படுத்தி வரும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு முரசு அஞ்சல் 9.8ஐ அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். AA_, TSC_ TAB/TAM_ எழுத்துருக்களைத் தங்கள் வெளியீடுகளில் பயன்படுத்தி வருபவர்களுக்கு இந்த முரசு அஞ்சல் 9.8 தேவைப்படும்.

இந்த ஆண்டு (2011) பிப்பிரவரியில் முரசு அஞ்சல் 9.8ஐ வெளியிடுகின்றோம். முரசு அஞ்சல் 9.8 பற்றி நிறைய பயனாளர்கள் ஆர்வமுடன் எங்களிடம் பல விவரங்களைக் கேட்டு வருகின்றனர். முரசு அஞ்சல் 9.8 பற்றி பயனாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கேள்வி பதில் வடிவில் பின்வரும் விளக்கங்களைத் தருகின்றோம்.


1. முரசு அஞ்சல் 9.8 என்றால் என்ன?

முரசு அஞ்சல் 9 வரிசையில் முரசு அஞ்சல் 9.8 புதிய பதிப்பு ஆகும். அச்சுப் பதிப்பகத்துறையில் பேஜ்மேக்கர், கோரல்டிரா போன்ற பழைய செயலிகளை இன்னமும் பயன்படுத்துபவர்களுக்கு முரசு அஞ்சல் 9.8 உதவும். முரசு அஞ்சல் 9.7 புரோ மற்றும் பதிப்பகத் தொகுப்பு (creative pack) ஆகியவற்றில் உள்ள எல்லாவகையான எழுத்துருக்களும் முரசு அஞ்சல் 9.8இல் உள்ளன. முரசு அஞ்சல் 9.7இல் உள்ள விசைப்பலகைகள் அனைத்தும் முரசு ரிச் டெக்ஸ்ட் கொன்வர்ட்டரும் இதிலும் செயல்படும். முரசு அஞ்சல் 9.7இல் உள்ள மற்ற கூடுதல் அம்சங்கள் முரசு அஞ்சல் 9.8இல் இருக்காது.


2. முரசு அஞ்சல் 10 வெளியிடப்பட்டுள்ளபோது முரசு அஞ்சல் 9.8 ஏன் வெளிவருகிறது?   

முரசு அஞ்சல் 10 எங்களது ஆகக் கடைசியான வெளியீடு. யூனிகோட் முறையில் மட்டும் தமிழ் ஆவணங்களை உருவாக்கும் பயனாளர்களுக்குரிய எழுத்துருக்களோடும் விசைப்பலகை வடிவமைப்புகளோடும் முரசு அஞ்சல் 10 உருவாக்கப்பட்டிருக்கிறது. யூனிகோட் முறை மட்டுமே தமிழுக்கு தொழில்துறை தரநிலைப் பெற்றுள்ளது. வெவ்வேறு பயன்பாட்டில் தமிழ் எழுத்து வரிகளை பிரச்னை இல்லாமல் பயன்படுத்த யூனிகோட் முறை தரநிலை மட்டுமே உதவுகிறது. எனினும் பேஜ்மேக்கர் போன்ற பழைய செயலிகளைப் பல பயனாளர்கள் இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பழைய செயலிகள் யூனிகோட் முறையில் செயல்படா. எனவே முரசு அஞ்சல் 10ஐ இத்தகைய பழைய செயலிகளில் பயன்படுத்த இயலாது. பயனாளர்கள் தங்கள் பழைய ஆவணங்களைத் தொடர்ந்து பயன்படுத்தவும் திருத்தவும் முரசு அஞ்சல் 9.8 வெளியிடப்படுகிறது.


3. எந்த வகை விண்டோவ்ஸ்களில் முரசு அஞ்சல் 9.8 செய்லபடும்?

விண்டோவ்ஸ் எக்ஸ்பியில் மட்டுமே முரசு அஞ்சல் 9.8 செயல்படும். விஸ்டோவ்ஸ் விஸ்டா அல்லது விண்டோவ்ஸ் 7இல் செயல்படாது. இவற்றில் முரசு அஞ்சல் 9.8 செய்படுமாறு செய்யும் திட்டமும் எங்களுக்கு இல்லை.


4. மெக்கின்டோஸ் கணினிகளில் முரசு அஞ்சல் 9.8 செயல்படுமா?

இல்லை. செயல்படாது.


5. முரசு அஞ்சல் 10 இல்லாமல் முரசு அஞ்சல் 9.8ஐப் கணினியில் பதிக்க இயலுமா?

முரசு அஞ்சல் 9.8 இயங்க முரசு அஞ்சல் 10ஐ வாங்கி விண்டோவ்ஸ் எக்ஸ்பியில் இயங்கும் அதே கணினியில் பதிக்க வேண்டும். முரசு அஞ்சல் 10 இல்லாமல் கணினியில் முரசு அஞ்சல் 9.8ஐ பதிக்க இயலாது.


6. முரசு அஞ்சல் 9.8இல் என்ன என்ன எழுத்துருக்கள் உள்ளன?

முரசு அஞ்சல் 9.7 லும் பதிப்பகத்துறை தொகுப்பிலும் உள்ள எல்லா எழுத்துருக்களும் முரசு அஞ்சல் 9.8இல் இருக்கும்.


7. முரசு அஞ்சல் 9.8இல் மேலும் புதிய எழுத்துருக்கள் எதிர்காலத்தில் இணைக்கப்படுமா?

இல்லை. முரசு அஞ்சல் 9.8இல் பயன்பாட்டுக்கு AA_, TSCu_, TAB_ or TAM வகை புதிய எழுத்துருக்கள் ஏதும் உருவாக்கப்படா. இனி எங்கள் புதிய எழுத்துருக்கள் அனைத்தும் யூனிகோட் தரநிலை அடிப்படையிலேயே உருவாக்கப்படும். அவை முரசு அஞ்சல் 10இல் மட்டுமே செயல்படும்.


8. முரசு அஞ்சல்10 எழுத்துருக்களை முரசு அஞ்சல் 9.8 எழுத்துருக்களோடும் முரசு அஞ்சல் 9.8 எழுத்துருக்களை முரசு அஞ்சல்10 எழுத்துருக்களோடும் பயன்படுத்த இயலுமா?

இந்த எழுத்துருக்களை கலந்து பயன்படுத்த இயலாது.


9 முரசு அஞ்சல்10யும் முரசு அஞ்சல் 9.8யும் ஒரே கணினியில் பதிக்க இயலுமா?

இயலும். முரசு அஞ்சல்10 யும் முரசு அஞ்சல் 9.8யும் ஒரே கணினியில் பதித்துப் பயன்படுத்த இயலும். ஆயினும் அது அதற்குரிய எழுத்துருக்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.இதற்கான விவரங்கள் பயனாளர் வழிகாட்டியில் இருக்கும்.


10. முரசு அஞ்சல் 10ஐப் பயன்படுத்தி உருவாக்கிய ஒரு வேர்ட் ( Word)ஆவணத்தை முரசு அஞ்சல் 9.8ஐப் பயன்படுத்தி பேஜ்மேக்கரில் வடிவமைத்து அச்சிட இயலுமா?

இயலும். அதற்குமுன் ரிச் டெக்ஸ்ட் கொன்வர்டரைப் (Rich Text Converter) பயன்படுத்தி TSCu_ அல்லது AA_ எழுத்துரு அமைப்புக்கு அந்த ஆவணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு பேஜ்மேக்கரில் அதை இடம்பெறச் செய்ய இயலும். ஆயினும் வேர்ட் 2007 ( Word 2007 versions) அல்லது அதற்குப் பிந்தியவற்றில் உருவாக்கப்பட்ட ஆவணங்களை இவ்வாறு மாற்றிப் பேஜ்மேக்கரில் பயன்படுத்த இயலாமற் போகலாம்.


11. இன்டிசைன் வடிவமைப்பு செயலியில் முரசு அஞ்சல் 9.8இல் உருவாக்கப்பட்ட தமிழ் ஆவணங்களைப் பயன்படுத்த இயலுமா?

AA_ அல்லது TAM_ எழுத்துருக்களைப் பயன்படுத்தினால் இயலும். ஆயினும் யூனிகோடில் (முரசு அஞ்சல் 10இல்) உருவாக்கப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்த இயலாமற் போகலாம்.


12. விண்டோவ்ஸ் விஸ்டா அல்லது விண்டோவ்ஸ் 7இல் முரசு அஞ்சல் 10ஐப் பயன்படுத்தி இன்டிசைனில் யூனி கோட் ஆவணங்களை எப்போது உருவாக்க இயலும்?

உண்மையில் இது முரசு அஞ்சல் 10இல் உள்ள பிரச்னை அல்ல. தமிழ் எழுத்துருக்களை இன்டிசைனில் பயன்படுத்தும் வகையில் இன்டிசைன் உருவாக்கத்தில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதே உண்மையான காரணமாகும். இதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். தீர்வு ஏதாவது ஏற்ட்ட பிறகு அறிவிப்போம்.


13. விண்டோவ்ஸ் 7இல் முரசு அஞ்சல் 9.8 செயல்படவில்லை என்றால் தமிழ் அச்சுப் பதிப்பகத்துறையில் முரசின் எதிர்காலம் என்ன?

தமிழ் அச்சுப் பதிப்பகத்துறைக்கு நாங்கள் கடப்பாடு/உறுதிப்பாடு கொண்டிருக்கிறோம். அடோபி கிரியேடிவ் சூட் (CS5) போன்ற நவீன செயலிகளில் பிரச்னை ஏதும் இல்லாமல் தமிழ் இடம் பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இத்தளங்களில் எங்கள் பயனாளர்கள் பிரச்னைகள் இன்றி அனைத்து தொழில்நுட்பங்களோடும் செய்லபடச் செய்ய எங்கள் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் முரசு அஞ்சல் 10இன் அடிப்படையில் இருக்கும்.


14. இன்று பேஜ்மேக்கரில் உருவாக்கப்படும் எனது ஆவணங்களை எதிர்காலத்தில் நான் இன்டிசைனுக்கு மாறும்போது யூனிகோடுக்கான ஆவணங்களாக மாற்ற இயலுமா?

இத்தகைய மாற்றத்துக்கான தீர்வை அளிக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம். இப்போதைக்கு உறுதி ஏதும் அளிக்க இயலாது.

Murasu Anjal 10.0

முரசு அஞ்சல் 10

விவரம் உள்ளே!

Sellinam 4.0

Sellinam Logo

Compose Tamil text with suggestions, auto-corrections and next-word predictions on all your favourite mobile apps. http://sellinam.com