கேள்வி - பதில்


1. முரசு அஞ்சல் 10ஆம் பதிப்பில் உள்ள புதுமைகளுள் முக்கியமானவை என்னென்ன?
 

 • யூனிகோடு குறியீட்டு முறை. கடந்த பதிப்புகளைப்போல், இதில் TSCII, TAB, TAM, AA முதலிய கூறியீட்டு முறைகள் இல்லை. எனவே இதற்கான எழுத்துருகளும் சேர்க்கப்படவில்லை. முழுக்க முழுக்க யூனிகோடு குறியீட்டு முறை மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.
   
 • ‘லிஃப்கோ’ தமிழ்ப் பேரகராதி. நீங்கள் தட்டச்சு செய்யும்போதே தமிழ் சொற்களின் பொருளையும் தேடிப்பார்க்கலாம். இதற்காக ‘லிஃப்கோ’ தமிழ்ப் பேரகராதியில் உள்ள அனைத்துச் சொற்களும் மின் வடிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
   
 • எழுத்துரு மாற்றம். மைக்ரொசாஃப்ட் வெர்ட், பவர் பைண்ட், எக்செல் ஆகிய செயலிகளில் கோர்க்கப்பட்ட பழைய ஆவணங்களை, யூனிகோடு குறியீட்டு முறைக்கு எளிதாக மாற்றிவிடலாம்.
   
  பல புதிய அம்சங்களுள் இவை மூன்றும் முதன்மை வகிக்கின்றன.

 
2. நான் பயன் படுத்துவது பேஜ் மேக்கர் செயலி மட்டுமே. முரசு அஞ்சல் 10ஐக் கொண்டு இதில் ஆவணங்களை உருவாக்க இயலுமா?

 

 • பேஜ் மேக்கர் மிகவும் பழைய ஒரு செயலி. அதை உருவாக்கிய அடோபி நிருவணமே அதைக் கைவிட்டு விட்டது. மேலும், பேஜ் மேக்கர் யூனிகோடு குறியீட்டு முறையை சரிவர ஏற்காது. எனவேதான் முரசு அஞ்சல் 10ஐக் கொண்டு பேஜ் மேக்கரில் ஆவணங்களை உருவாக்க முடியாது.
    
 • பேஜ் மேக்கரின் பயனர்களுக்கு அடோபி வழங்கும் புதிய செயலி இன்-டிசைன். இந்தச் செலயி யூனிகோடு குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டாலும், தமிழ் வடிவத்தை இன்னும் சரிவர கொடுப்தில்லை. இதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம்.
    
 • எளிமையான அச்சு வேலைகளுக்கு வெர்ட், பப்ளிஷர், ஓப்பன் ஆபிஸ் முதலிய செயலிகளைப் பயன் படுத்தலாம். இவை அனைத்தும் யூனிகோடில் தமிழை சரிவர வழங்குகின்றன. மெக்கிண்டாஷ் கணினி வைத்திருப்போர் பேஜஸ், ஓப்பன் ஆபிஸ் முதலியவற்றப் பயன்படுத்தலாம்.
 

3. தமிழ்ப் பேரகராதி முரசு அஞ்சல் 10இல் எவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளது?
 
 

 • ஒரு சொல்லைக் கோர்த்வுடன், இடக் கட்டத்தைத் (space bar) தட்டும் முன், ESC விசையைத் தட்டினால், அந்தச் சொல்லுக்கான பொருள் தனி ஒரு கட்டத்தில் தோன்றும். அதுபோல, ஏற்கனவே கோர்க்கப்பட்ட சொல்லையும் தேர்ந்தெடுத்து பொருளைத் தேடலாம்.
   
 • மைக்ரொசாஃப்ட் வெர்டில் 'மலை' என்ற பொருளுக்கு விளக்கம் தேடும் ஓர் எடுத்துக்காட்டை கீழே காணலாம்.  பெரிதாகக் காண்பதற்கு படத்தின் மீது கிளிக்கிடுக.


 
 
4. என்னிடம் DOC, PPT, XLS ஆவணங்கள் நிறைய உள்ளன. இவை அனைத்தும் TSCII குறியீட்டில் உருவாக்கப்பட்டவை.  முரசு அஞ்சலின் பழைய பதிப்பு மட்டும் அல்லாமல், மற்ற தமிழ்ச் செயலிகளிலும் கோர்க்கப்பட்டவை. இவற்றை யூனிகோடிற்கு மாற்ற முடியுமா?

 • கண்டிப்பாக. PPT  ஆவணம் ஒன்றை எப்படி மாற்றுவது என்பதை கீழே உள்ள இரண்டு படங்களும் விளக்குகின்றன. DOC, XLS ஆவணங்களையும் இவாறே மாற்றலாம்.
   
 • பெரிதாகக் காண்பதற்கு படத்தின் மீது கிளிக்கிடுக.

PPT Doc before conversion 
PPT After conversion

 

Murasu Anjal 10.0

முரசு அஞ்சல் 10

விவரம் உள்ளே!

Sellinam 4.0

Sellinam Logo

Compose Tamil text with suggestions, auto-corrections and next-word predictions on all your favourite mobile apps. http://sellinam.com