இன்று புதிதாய்ப் பிறந்தேன்!


karthi - Posted on 05 May 2009

வலைப்பூவின் தலைப்பூ கொஞ்சம் அலட்டலாய் இருந்தாலும் அது உண்மைதான். கடந்த 20 ஆண்டுகளாய் நான் இணையத்தில் உலவினாலும், வலைப்பூக்கள் தோன்றியும் பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும், எனக்கென ஒரு வலைப்பூ வைத்துக் கொள்ளவேண்டுமென நான் முயற்சி எடுத்ததில்லை. ஆசை இருந்தது. புதிதாக வந்த பசங்களெல்லாம் வலைப்பூ வைத்துக் கொள்ளும்போது நாம் ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது என.
ஆனால் எப்போதும் ஆசைக்கும் செயல்படுத்தலுக்கும் உள்ள தூரம் ஒரு முழத்துக்கு மேல் அல்லவா? ஆகவே அந்த முழம் கடந்து போக முடியவில்லை. இன்று கடந்து விட்டேன். எனது வலை குரு முத்து நெடுமாறன் கைகொடுத்தார்.இந்த முழ தூரத்தைத் தாண்டி விட்டேன். இந்த வலைப்பூ கரைக்கு வந்தது புதிதாய்ப் பிறந்தது போலத்தான் இருக்கிறது.
ஏன் என் வலைப்பூவுக்குள் மலேசியாவின் பேரை இணைத்துக் கொண்டேன்? ஏனெனில் இது நான் நேசிக்கும் தேசம். என் பிறந்த மண். நான் கலாசாரத்தாலும் பண்பாட்டினாலும் தமிழனாய் இருந்தாலும் பிறப்பால் முதலில் மலேசியன். இந்த நினைவு எனக்குள்ளும் என்னை வாசிப்போருக்குள்ளும் எப்போதும் இருக்க வேண்டும் என்பதால்தான் "மலேசியாவிலிருந்து ரெ.கா.".
என் முதல் வலைப்பூ அளிப்பாக அண்மையில் நான் "யுகமாயினி" இதழில் எழுதிய கட்டுரை ஒன்றை இடுகிறேன். இது என் நாட்டைப் பற்றி நான் அடையும் பெருமிதத்தைச் சொல்லும்.
மற்ற விஷயங்கள் மெதுவாகத் தொடரும்.
மலேசியாவிலிருந்து அன்புடன்,
ரெ.கா.
 

Murasu Anjal 10.0

முரசு அஞ்சல் 10

விவரம் உள்ளே!

Sellinam 4.0

Sellinam Logo

Compose Tamil text with suggestions, auto-corrections and next-word predictions on all your favourite mobile apps. http://sellinam.com